Saturday, 28 July 2018

தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்


தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

முதலில்:

விநாயகர் ஸ்லோகம்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே!


சிவனுக்குரிய ஸ்லோகம்

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்தீம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருக மிவபந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீயமா ம்ருதாத்!


மங்கள சண்டிகா ஸ்லோகம் (மாங்கல்ய பலம்தரும்)
சத்யவானை மீட்ட சாவித்திரி சொன்ன ஸ்லோகம்.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே ஸதா!

ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்லோகம்(படிப்பு, ஞானம், வேலை வாய்ப்பு, வியாபாரத்தில் அபிவிருத்தி, வெற்றி தரும்)

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஸ்ரீ ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

தன்வந்திரி ஸ்லோகம் (ஆரோக்கியம், மருத்துவ பலிதம்)

சதுர்புஜம் பீத வஸ்திரம் சர்வாலங்கார சோபிதம்
த்யாயேத் தன்வந்திரிம் தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்!


குரு ஸ்லோகம்

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வரஹ
குரு சாக்‌ஷாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!

தஷிணாமூர்த்தி ஸ்லோகம்

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தஷிணாமூர்த்தியே நமஹ!


அம்பாள் ஸ்லோகம்

ஓம் ஆயுர் தேஹி தனம் தேஹி வித்யாம் தேஹி மஹேஸ்வரி
சமஸ்தம் அகிலம் தேஹி தேஹிமே பரமேஸ்வரி!


நவக்ரஹ ஸ்லோகம்

ஓம் ஆதித்யாச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர
சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹ

அனுமார் ஸ்லோகம்

ஓம் புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் ச அனுமத் ஸ்மரணாத் பவேத்!

அடிக்கடி சொல்லக் கூடியது

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதகே சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே!


Thursday, 3 November 2016

குல தெய்வ வழிபாடு - 2016

7-2-16 - மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று குலதெய்வத்தின் கோவிலுக்குப் போயிருந்தோம்.( வையை கரையடியான் கோவில்.)

முதல் நாளே மதுரை சரவணா ஸ்டோர்ஸில் அபிஷேகப் பொருட்கள், பூஜைப் பொருட்கள் வாங்கியாயிற்று.

காலை 5 மணிக்கு டாக்ஸி வந்து விட்டது.

போகும் வழியில் இராமநாதபுரத்தில் ஹோட்டலில் டிஃபன்.

இராமநாதபுரத்திலேயே (அபிஷேகத்துக்கு) பால் வாங்கிகிட்டோம்.

8.15 மணிக்கெல்லாம் கோயிலுக்குப் போயாச்சு.

கூட்டமான கூட்டம். நிறைய பேரை தெரியவில்லை எனக்கு.

அபிஷேகப் பொருட்களை எடுத்துக் கொடுத்து விட்டு, 3 தட்டுக்களில் தனித் தனியாக, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ எடுத்து வச்சோம்.

அபிஷேகம் 9.15 மணிக்கு ஆரம்பம். முடிந்தவரை தரிசித்தோம். (கூட்டம்)

12 மணி ஆகிடுச்சு.

கரையடியான் சன்னிதியில் பிள்ளையார், கரையடியான், பூரணம், பொற்கொடி அம்மன் நால்வருக்கும் தேங்காய் உடைத்து, பூஜை.

ராக்கம்மாள் சன்னிதியில், கருப்பண்ண சாமி, ராக்கம்மாள் இரண்டு பேருக்கும் 2 தேங்காய்கள், பிரகாரத்தில் இருக்கும் கருப்பண்ண சாமிக்கு 1 தேங்காய்.

பன்னிரண்டு நெய் விளக்குகள் ஏற்றி, கரையடியான் சன்னிதியில் வழிபட்டோம்.

ராக்கம்மாள் சன்னிதியிலும் 2 விளக்குகள் ஏற்றினோம்.

மன நிறைவு!!!

கோவிலுக்கு வருட சந்தாவும் நன்கொடையும் கொடுத்து, ரசீது பெற்றுக் கொண்டோம்.

உண்டியலில் காணிக்கை சேர்த்தோம்.

உறவினர்களை சந்தித்தோம். பேசினோம்.

1.30 மணிக்கெல்லாம் கிளம்பினோம்.

முருகன் கோவிலுக்கும் போனோம். ஊருணிக் கரை பிள்ளையார் இங்கே இருக்கிறார் இப்ப.

பிள்ளையார், முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி, முருகனுக்கு தேங்காய், பழம், அர்ச்சனை. தீபாராதனை தரிசித்தோம். கர்ப்பக்கிருஹ விளக்கில் நெய் சேர்த்தோம்.

பிள்ளையாருக்கு விடலைத் தேங்காய்.

காளியம்மன் கோவிலில் விடலைத் தேங்காய்.

டாக்ஸிக்கு 2200 ரூபாய் ஆயிற்று.

சாயங்காலம் மதுரை வந்தாயிற்று.




Thursday, 14 May 2015

ரசித்தவை ருசித்தவை 2 - ஹோட்டல் சாம்பார்

ஹோட்டல் சாம்பார்/சரவணபவன் சாம்பார்

சாதத்தில் ஊற்றி சாப்பிடுகிற சாம்பாருக்கும், காலை டிஃபனுக்கு - பொங்கல்/இட்லிக்கு செய்கிற சாம்பாருக்கும் செய்முறையில் வித்தியாசம் இருக்கிறது.

இட்லிக்கு - காரம் குறைவாக, கொஞ்சம் இனித்தாற்போல, தக்காளி கூடுதலாக சேர்த்தால் நன்றாக இருக்கும்.

இருந்தாலும், ஹோட்டல் சாம்பார் குறிப்பு தெரிந்தால் அதன்படி செய்து பார்க்கலாமே என்று தேடினேன்.

சரவணபவன் சாம்பார்/ஹோட்டல் சாம்பார் என்ற தலைப்பில் நிறைய தோழிகள் அருமையான குறிப்புகள் கொடுத்திருந்தார்கள்.

அவங்க சொல்லியிருந்ததில் கவனித்தது - தக்காளியும் பொரிகடலையும் அரைத்துக் கொள்ளணும், அத்துடன் சாம்பார் பொடியையும் அரைத்து, வெங்காயம் தக்காளியுடன் அரைத்ததை வதக்கி, கொதிக்க வைக்க வேண்டும் என்பது.

அனேகமாக எல்லாக் குறிப்புகளிலுமே புளி சேர்க்காமல்தான் செய்ய சொல்லியிருந்தார்கள். ஆனால், எனக்கு புளி சேர்த்து சாம்பார் செய்யவே விருப்பம்.

சாம்பாருக்கு அனேகமாக தனி மிளகாய்ப்பொடிதான் சேர்ப்பேன். சாம்பார் பொடி என்று தனியாக திரித்து வைத்துக் கொள்வதில்லை. மல்லிப் பொடியை கொஞ்சம் சேர்த்துப் போட்டு விடுவேன்.

அதனால் சிறு வித்தியாசங்களுடன் செய்து பார்த்தேன். ரொம்பவும் நன்றாகவே வந்தது.

இதோ செய்முறை:

ஹோட்டல் சாம்பார்/சரவணபவன் சாம்பார்: இட்லிக்கு/வெண்பொங்கலுக்கு:

தேவையான பொருட்கள்:

புளி                       2 எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு     முக்கால் கப்
பாசிபருப்பு         2 ஸ்பூன்
மிளகாய்ப்பொடி   இரண்டரை டீஸ்பூன்
மல்லிப் பொடி   1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி   அரை டீஸ்பூன்
உப்பு   சுவைக்கேற்ப

கருவேப்பிலை, பச்சைக் கொத்துமல்லி சிறிதளவு

நறுக்கி வைக்க வேண்டியவை:
பெரிய வெங்காயம்      1
பச்சை மிளகாய்         3
தக்காளி             2
கத்தரிக்காய்    2
முருங்கைக்காய் 1
காரட்      2
அரைக்க:
தேங்காய்ப்பூ   கால் கப்
பொரிகடலை    1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு   1 டீஸ்பூன்
நறுக்கிய தக்காளி  1

தாளிக்க:

எண்ணெய்      1 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு    1 டீஸ்பூன்
வெந்தயம்   கால் டீஸ்பூன்
பெருங்காயப் பொடி  அரை டீஸ்பூன்
கிள்ளிய சிவப்பு மிளகாய்  2

செய்முறை:

புளியை நன்றாக ஊற வைத்து, கரைத்து வைக்கவும்.
குக்கரில் துவரம்பருப்பையும் பாசிப்பருப்பையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மஞ்சள் பொடி சேர்த்து, குழைவாக வேக வைத்து, மசித்து, கரைத்து வைக்கவும்.
வெங்காயம் பச்சை மிளகாய் இவற்றை பெரிய் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
சாம்பாரில் போடுவதற்கு, கத்தரிக்காய்/ முருங்கைக்காய் இவை இருந்தால், குழையாமல் தனியாக வேக வைத்துக் கொள்ளவும்.
காரட்/முள்ளங்கி போன்ற காய்களாக இருந்தால், வில்லைகளாக நறுக்கி, பருப்புடன் சேர்த்து, குக்கரில் வேக வைத்து விடலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய் வெங்காயம், பச்சை மிளகாய் இவற்றைப் போட்டு, வதக்கவும்.
பிறகு, நறுக்கிய தக்காளியும் சேர்த்து, குழைய வதக்கவும்.
இதில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை சேர்க்கவும்.
உப்பும் சேர்க்கவும்.
புளி பச்சை வாசனை போக, கொதித்ததும், வெந்த பருப்பையும் சேர்த்து, ஒரு கொதி வ்ர விடவும்.

இதற்கிடையில், மிக்ஸியில் தேங்காய்ப்பூ, பொரிகடலை, கடலை மாவு, மிளகாய்ப்பொடி, மல்லிப் பொடி, இவற்றை சேர்த்து, நன்றாக மசிய அரைத்து வைக்கவும்.
தக்காளியையும் தனியாக மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
கொதித்த புளித்தண்ணீர் மற்றும் பருப்புக் கலவையில், அரைத்த தக்காளி மற்றும் தேங்காய்ப்பூ கலவையை கரைத்து ஊற்றவும்.

கடலை மாவு/பொரிகடலை சேர்த்து அரைத்திருப்பதால், கிளறிக் கொண்டே ஊற்றவும். இல்லையென்றால், கட்டிகளாகி விடும்.

அடி பிடிக்காத பாத்திரத்தில், இந்த சாம்பாரை கொதிக்க விடவும். அடிக்கடி கிளறி விட வேண்டும்.
நுரை அடங்கக் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

தனியாக காய்கள் வேக வைத்திருந்தால், அவற்றையும் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம், பெருங்காயப் பவுடர், கிள்ளிய சிவப்பு மிளகாய் இவற்றைப் போட்டு, தாளிக்கவும். 
கருவேப்பிலை சேர்க்கவும்.
இதை சாம்பாரில் கலக்கவும்.
கழுவி, சுத்தம் செய்த, பொடியாக நறுக்கிய மல்லித் தழையை, மேலே தூவி, கலக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார்.
இட்லி, தோசை, வெண் பொங்கலுக்கு பொருத்தமாக இருக்கும்.


தளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்!



என் கணவர் திரு சுப்ரமணியம் அவர்கள், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்திருக்கும் ஒரு பதிவு இங்கே:
தளபதி விஜய் அவர்களுடன் – தங்கமான தருணங்கள்!

மதுரையில் வேலை பார்த்து, ரிடையர் ஆன பிறகு, சென்னைக்கு வந்து - திரைப்படங்களிலும், சீரியல்களிலும், விளம்பரப்படங்களிலும் நடித்தது, மிகவும் அருமையான வித்தியாசமான அனுபவங்களைத் தந்தது.
‘கத்தி’ பட்த்தில் நடிகர் விஜய்யுடன், முருகதாஸ் டைரக்‌ஷனில் நடித்தது மறக்கவே முடியாத ஒன்று.
ஆகஸ்ட் 18, 2013 அன்று, டைரக்டர் முருகதாஸ் அவர்களே நேரடியாக செலக்ட் செய்தார். என்னுடன் என்னைப் போல சீனியர் சிட்டிஸன்கள்(!) பலரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அஸிஸ்டெண்ட் டைரக்டர் எங்களிடம் வந்து, நாங்கள் தாடி வளர்க்கத் தொடங்க வேண்டும் என்றும், அந்த கெட் அப் படம் முடியும் வரையிலும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
தளபதி விஜய்யுடன் படம் முழுவதும் வரும் வாய்ப்பு என்று தெரிந்தபோது – பிரமிப்பாகவும், எக்ஸைட்ட் ஆகவும் இருந்த்து.
விஜய் மிகவும் ரிசர்வ்ட் என்று சொல்வார்களே, படப்பிடிப்பில் அவருடன் பேச முடியுமா என்று ஆவலாக இருந்தது.
ஆனால், விஜய் படப்பிடிப்பில் எல்லோருடனும் அன்புடனும் சகஜமாகவும் பழகி, எங்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
எங்கள் சக நடிகர் ஒருவருக்கு பிறந்த நாள் வந்த போது, கேக் வெட்டி, எங்களுடன் அவரது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.
புஷ்பா கார்டன்ஸ், வளசரவாக்கத்தில் முதியோர் இல்லம் செட் போடப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது.
ஒரு நாள் படப்படிப்பின்போது, சகஜமாக என் அருகில் அமர்ந்து, என்னைப் பற்றி, என் குடும்பத்தைப் பற்றி, விசாரித்து, கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேல், உரையாடியது மறக்கவே முடியாது.
படத்தில் விஜய், முதியோர் இல்லத்தில் எங்கள் அனைவரிடமும், மீடியாவின் கவனத்தை திருப்புவது பற்றி பேசுவது போல ஒரு காட்சியை பார்த்திருப்பீர்கள்.
மிக நீண்ட வசனம் – ஏற்ற இறக்கங்களுடன் – உணர்ச்சி ததும்ப அவர் பேசியபோது, எல்லோரும் பிரமித்துப் போனோம்.
காட்சி படமாகி முடிந்து, அவர் கிளம்பத் தயாரான போது, அவர் அருகில் சென்று – ’சார், ஒரு நிமிஷம் உங்களோட பேசணும்’ என்றேன்.
‘சொல்லுங்க’, என்றார் சகஜமாகவும் அன்புடனும்.
‘ரொம்ப அருமையாக, பிரமாதமாகப் பேசினீங்க சார், இந்த சீன் ரசிகர்ளிடமும் பொதுமக்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெறும்’, இந்த சீன் நிச்சயமாக மிகப் பெரிய அளவில் பேசப்படும் சார்’, என்று என்னுடைய பாராட்டுக்களை மனப்பூர்வமாக தெரிவித்தேன்.
‘உங்களுக்குப் பிடிச்சிருந்த்தா சுப்ரமணியம் சார், ரொம்ப தாங்க்ஸ்’ என்று மலர்ந்த முகத்துடன் அவர் நன்றி சொன்ன போது, சந்தோஷமாக இருந்தது.
அவருடன் படத்தில் சிறிய வேட்த்தில் நடித்த என்னுடைய பாராட்டுக்களை, முக்கியத்துவம் கொடுத்து, நன்றி சொன்னது, அவர் மேல் இருக்கும் அன்பையும் மரியாதையையும் இன்னும் அதிகரித்த்து.
அவரது பிறந்த நாளுக்கு சில நாட்களுக்கு முன்னால் –
யூனிட்டில் ‘விஜய் எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுக்கப் போறாராம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
யூனிட் மட்டும்தான் – இல்ல இல்ல – கூட நடிக்கிற நம்ம எல்லோருக்கும்தான், என்று ஒரு ஊகம்.
எல்லோரையும் குடும்பத்துடன் வரச் சொல்லப் போறாங்களாம் என்று ஒரு தகவல்.
அது எப்படி முடியும், கல்யாண வீடு மாதிரி இருக்குமே என்று ஒரு பேச்சு.
யாருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.
சில நாட்களுக்குப் பிறகு – படப்பிடிப்புக்குக் காலையில் வந்தவுடன், யூனிட்டிலிருந்த எல்லோருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
இன்று மதியம் விஜய் எல்லோருக்கும் விருந்து வழங்குகிறார். எல்லோரும் குடும்பத்துடன் வரும்படி அழைத்திருக்கிறார்!!!
அனேகமாக எல்லோருமே தயாராகத்தான் இருந்தார்கள். அவரவர் வீட்டுக்கு ஃபோன் கால்கள் பறந்தன.
பின்னே???!!!! தளபதி விஜய் தரும் விருந்தில் கலந்து கொள்வது என்றால் சாதாரண விஷயமா?
நான் என் மனைவியிடம் ஃபோனில் தகவல் சொல்லி விட்டு, வீட்டுக்குப் போய் அழைத்துக் கொண்டு வந்தேன்.
என் மனைவியிடம் பல கேள்விகள் இருந்தன –
விஜய்யைப் பார்க்க முடியுமா? ஷூட்டிங் பாக்கலாமா? விஜய் பேசுவாரா? ஃபோட்டோ எடுக்க அலவ் பண்ணுவாங்களா என்றெல்லாம் கேட்டுக் கொண்டே வந்தார்.
எதற்கும் இருக்கட்டும் என்று காமிராவையும் கொண்டு வந்தார்.
மதிய விருந்துக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
சைவம், அசைவம் என்று தனித் தனியான பந்திகள்.
எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் விதமாக, நடிகர் விஜய் அவர்களே, எஙகள் அனைவருக்கும் பிரியாணி பரிமாறி, விருந்து அளித்தார்.
ஆம், கிட்ட்த்தட்ட 400 பேருக்கும் மேல் வந்திருந்தோம்.
அத்தனை பேருக்கும் பொறுமையாகவும் சிரித்த முகத்துடனும், அவரே பரிமாறினார்.


எல்லோருக்கும் பரிமாறி முடித்து, எல்லோரும் சாப்பிட்டாச்சா என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்குப் பிறகுதான் அவர் சாப்பிட்டார்.
இது மட்டுமா?!
முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்த எங்கள் அனைவருக்கும் அன்று உடைகள் பரிசளித்தார்.
அத்துடன் ஒவ்வொருவருடைய குடும்பத்தினருடனும, தனித்தனியாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்.
அனைவரிடமும் அன்புடன் உரையாடினார்.
கிட்ட்த்தட்ட ஒன்றரை வருடங்கள் - கத்தி படத்தில் அவருடன் நடித்த்து மறக்க முடியாத ஒன்று.
படப்பிடிப்பு நிறைவடைந்து, சில வாரங்களுக்குப் பிறகு – மீண்டும் ஒரு தகவல் –
டைரக்டர் முருகதாஸ், நடிகர் விஜய் இருவரும் எங்கள் அனைவரையும் மீண்டும் சந்திக்க அழைத்திருக்கிறார்கள்.
இங்கே நாங்கள் என்று நான் குறிப்பிடுவது – படத்தில் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களாக நடித்தவர்கள் – கிட்ட்த்தட்ட 40 பேர் – எல்லோருமே அறுபது வயதைக் கடந்தவர்கள்.
எங்கள் அனைவரிடமும் டைரக்டர் முருகதாஸ் சகஜமாக, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார்.
ஆந்திராவில் படப்பிடிப்பு நடந்த போது – எங்கள் அனைவரிடமும் படம் முடிந்த பிறகு ஒரு நாள் சந்தித்துப் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
விஜய் அவர்கள் ஏற்கனவே விருந்து கொடுத்து விட்டாரே, இப்போது மீண்டும் சந்திப்புக்கு அழைதிருக்கிறாரே என்று ஒரு ஆச்சரியம்.
ஏவிஎம் ஸ்டுடியோவில் மாலை நேரத்தில் எல்லோரும் கூடினோம்.
விஜய் எங்கள் எல்லோருக்கும் விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்து, ஆச்சரியத்திலும், ஆன்ந்தத்திலும், திக்கு முக்காட செய்தார். அத்துடன் படப் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றும் வழங்கப்பட்ட்து
விஜய், முருகதாஸ் இருவருடன், புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

என் கைகளைக் குலுக்கி, தோள் மீது கை போட்டு, அன்புடன் என்னை அணைத்துக் கொண்டார் விஜய்.


மறக்க முடியுமா – அந்த்த் தங்கத் தருணங்களை!!!

Friday, 8 May 2015

ரசித்தவை ருசித்தவை - 1 - பட்டர் நான், கார்லிக் நான், சன்னா மசாலா

ஹோட்டலில் நாம் ஆர்டர் செய்யும் உணவுகளை வீட்டிலேயே செய்து பார்க்க ஆசையாக இருந்தது.

அதே போல பிரபலமாக பேசப்படும் உணவுகளையும் சமைத்துப் பார்க்க நினைத்தேன்.

அந்த வகையில் சமீபத்தில் நான் செய்து பார்த்த உணவுகள்:

சரவணபவன் ஹோட்டல் சாம்பார்
பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்
சன்னா மசாலா
ஜீரா ரைஸ்
வெஜ் கடாய்
சிதம்பரம் கொத்ஸு

எல்லாமே மிகவும் நன்றாக வந்தது.

இணையத்தில் இப்போது நிறைய தோழிகள், வித விதமான சமையல் குறிப்புகளை, புகைப்படங்களுடன் தந்து, அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தரும் குறிப்புகளின்படி சமைத்தால், பிரமாதமாக வருகிறது.

மேலே சொன்ன குறிப்புகள் எல்லாம் பல ப்ளாக்குகளில் தேடி, அதன் படி சமைத்துப் பார்த்ததுதான்.

முதலில் பட்டர் நான் மற்றும் கார்லிக் நான்:

அறுசுவை தளத்தில், வனி வசுவின் குறிப்பைப் பார்த்து செய்தது:

லிங்க் இதோ:

பட்டர் நான்/கார்லிக் நான் செய்யும் முறை

இந்தக் குறிப்பில் கொடுத்திருந்தது போல,

2 கப் மைதா மாவில், பேகிங் பௌடர் 3/4 டீஸ்பூனும், சோடா உப்பு 1/4 டீஸ்பூனும் கலந்து சலித்து வைத்தேன்.

பிறகு,  அரை கப் வெதுவெதுப்பான பால், அரை கப் தயிர், சிறிது உப்பு, 1/2 டீஸ்பூன் சீனி இவற்றை மாவில் கலந்து, விரல்களால் கலந்து, பிசைந்து வைத்தேன். மாவு சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும் அளவுக்கு, மேலும் சிறிது தண்ணீர் ஊற்றிப் பிசைந்து வைத்தேன்.

ஒரு பாத்திரத்தில் பிசைந்த மாவை உருட்டி வைத்து, ஒரு வெள்ளைத் துணியை நனைத்து, மாவின் மேல் போட்டு, ஒரு அகலமான தட்டைப் போட்டு,  மூடி வைத்தேன்.

4 மணி நேரம் பிசைந்த மாவு ஊறியதும்,  எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு,  மைதா மாவைத் தொட்டு, சப்பாத்திகளாக இட்டு வைத்தேன்.

ஒரு நான் ஸ்டிக் தவாவை அடுப்பில் காய வைத்தேன்.

தேய்த்து வைத்திருந்த சப்பாத்தியின் ஒரு பக்கத்தில், கொஞ்சம் தண்ணீர் தெளித்தேன்.

தண்ணீர் தெளித்த பக்கத்தை, சூடேறிய தவாவில் போட்டு, சுற்றி வர ஓரங்களை ஒட்டினேன்.

இப்படி ஒட்டியதுமே, நன்றாக கொப்பளங்கள் வந்து, அங்கங்கே உப்பலாக ஆகி, வேக ஆரம்பித்தது.

தீயைத் தணித்து, ஒரு மூடியைப் போட்டு, 1 நிமிடம் வேக விட்டேன்.

பிறகு, அடுத்த பக்கம் திருப்பிப் போட்டு, ஓரங்களை, மர சட்டுவத்தால், நிதானமாக அழுத்தி விட்டு,  வெந்ததும் எடுத்தேன்.

ரூம் டெம்பரேச்சரில் இருக்கும் வெண்ணெயை, இந்த நான் மீது தடவி, பரிமாறினேன்.

கார்லிக் நான்:

பூண்டு பற்களை, தோல் உரித்து, நன்றாகத் தட்டி வைத்துக் கொண்டேன்.

நான் சூடாக இருக்கும்போதே, இரண்டு பக்கமும் இந்த பூண்டு விழுதை தடவி, பரிமாறினேன்.

ஹாட் பேக்கில் எடுத்து வைத்த நான்கள், ஐந்து மணி நேரத்துக்குப் பிறகும் கூட, சாஃப்ட் ஆக இருந்தது.

வனி சொல்லியிருந்த மாதிரி,  தவாவில் போட்ட நானை,  திருப்பிப் போடும்போது, அடுப்பில் நேரடியாக சுட முயற்சி செய்தேன், அது எனக்கு சரியாக வரவில்லை. அதனால் தவாவிலேயே திருப்பிப் போட்டு, வேக வைத்து, எடுத்தேன்.

இதற்குத் தொட்டுக் கொள்ள சன்னா செய்தேன்.

அறுசுவை தளத்தில் நான் கொடுத்திருக்கும் க்ரீன் பீஸ் மசாலாவின் செய்முறைதான் சன்னா மசாலாவுக்கும்.

பட்டாணிக்கு பதிலாக, கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்து, சேர்க்க வேண்டும்.

குறிப்பின் லிங்க் இதோ:

சன்னா மசாலா/க்ரீன் பீஸ் மசாலா

பட்டர் நான் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால், எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது, இது சரியாக வருமா என்று.

சாதாரண சப்பாத்திக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்ததும், இனி நன்றாக செய்து விட முடியும் என்று புரிந்தது.

சப்பாத்தி செய்யும்போது, இவ்வளவு நேரம் பிசைந்த மாவை ஊற வைப்பதில்லை.

மாவில் சேர்க்கும் பேகிங் சோடா, சோடா உப்பு முதலியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

முக்கியமான வித்தியாசம் - தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியின் ஒரு பக்கத்தில் தண்ணீர் தெளித்து, தவாவில் ஒட்டி வைத்து, மூடி வைத்து, வேக விடுவது.

இன்னும் சில தோழிகள்  - தங்கள் குறிப்புகளில் - சோடா உப்பு/பேகிங் சோடாவுக்கு பதிலாக ஈஸ்ட் சேர்க்க சொல்லியிருக்கிறார்கள்.

அடுத்த முறை செய்யும்போது, ஈஸ்ட் அல்லது ஈனோ சால்ட் சேர்த்து செய்து பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

ஃபோட்டோ பிறகு சேர்க்கிறேன்.






Thursday, 30 April 2015

அஜித்குமாரின் அன்பு மனம்


அஜித்குமாருடன் என் கணவர் திரு சுப்ரமணியம் ஒரு படத்தில் நடித்த போது, அஜித்குமார் எடுத்த ஃபோட்டோவைப் பற்றி, என் கணவர் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இங்கே:





அஜித்குமாரின் அன்பு மனம்

சென்ற வருடத்தில் ஒரு நாள் – அஜித்குமாருடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது.

படப்பிடிப்பு இடைவேளையின் போது – சக நடிகர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தோம்.

லேசாக மழை ஆரம்பித்ததால் – அஜித்குமார் உள்ளே வந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை அவர் கடந்த போது, மரியாதை நிமித்தம் நான் எழுந்து நின்றேன். அவர் உட்கார நினைத்தால் இடம் வேண்டுமே.

அஜித்குமார் என்ன செய்தார் தெரியுமா – என் தோளைப் பிடித்து அழுத்தி என்னை உட்கார வைத்தார்.

அது மட்டுமல்ல – “அங்கிள், நான் வர்றதுக்காக எல்லாம் நீங்க எழுந்திருக்ககூடாது, உட்காருங்க அங்கிள்`’ `என்று அன்புடன் கூறினார்.

அவர் அத்தனை அன்பாக சில வார்த்தைகள் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.

அஜித்குமார் உங்களை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். இந்த நம்பரை காண்டாக்ட் செய்து, உங்கள் ஃபோட்டோவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் ஒரு நண்பர்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அஜித் குமார் என்னை ஃபோட்டோ எடுத்தாரா, எப்பொழுது என்று திகைத்தேன்.

குறிப்பிட்ட நண்பரை தொடர்பு கொண்டேன்.
படப்பிடிப்பு தளத்தில் இருந்த என்னை, எங்கோ தொலைவில் இருந்து, மிக அருமையாக ஃபோகஸ் செய்து, புகைப்படம் எடுத்திருந்தார் அஜித்குமார்.

அது மட்டுமா!

அந்தப் புகைப்படத்தை பெரிய அளவில் ப்ரிண்ட் செய்து, அதில் அவரது ஆட்டோக்ராப் இட்டிருந்தார்.
அழகான முறையில் அதை ஃப்ரேமும் செய்து, அனுப்பியிருந்தார்.

என்னுடைய மகிழ்ச்சியையும் திகைப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

புகைப்படைத்தை என்னிடம் கொடுத்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?

“சார், இந்த ஃபோட்டோ உங்ககிட்ட கொடுத்தாச்சுன்னு அஜித்குமாருக்கு தகவல் சொல்லணும். நீங்க இதை கையில் வைத்துக் கொள்ளுங்க, ஒரு ஃபோட்டோ எடுக்கிறேன்.

அதோடு, நீங்க அஜித்குமாரிடம் ஏதாவது சொல்லணும் என்றால் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துக்கறேன்” என்றார்.



மகிழ்ச்சியில் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“ரொம்ப நன்றி அஜித் சார், சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் பேசி, என் நன்றியை சொல்ல ஆசைப்படறேன்”  என்று ஆர்வத்துடன் சொன்னேன் அந்த வீடியோவில்.

அடுத்த வாரத்தில் மற்றொரு படப்பிடிப்பில் நண்பர் என்னை சந்தித்தார்.

”அஜித்குமாரிடம் பேசணும்னு சொன்னீங்களாமே, இப்பப் பேசறீங்களா?” என்று கேட்டு, அஜித்குமாரின் செயலாளரின் ஃபோனில் தொடர்பு கொண்டு, என்னிடம் கொடுத்தார்.

“என்ன சுப்ரமணியம் சார், ஃபோட்டோ கிடைச்சுதா” என்று அஜித்குமாரின் காந்தக் குரல் கேட்டது.

‘கிடைச்சுது சார், ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஆசை, உங்களுடன் இன்னும் நிறைய படங்களில் சேர்ந்து நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்தேன்.

“அதுக்கென்ன, கண்டிப்பா நான் உங்க கூட நிறைய படங்களில் நடிக்கிறேன்” என்றார் அன்புடன்.

எத்தனை எளிமையும் அடக்கமும் பாருங்கள்!!!

உங்க கூட நான் நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மக்களின் மனம் கவர்ந்த அஜித் குமாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீ சௌபாக்கியலக்ஷ்மி அஷ்டகம்


அக்டோபர் 2014 மாத ‘ஞான ஆலயம்’ இதழில், நான் அனுப்பிய ‘ஸ்ரீ சௌபாக்கியலக்ஷ்மி அஷ்டகம்’ பிரசுரமாகி இருக்கிறது.

ஃபோட்டோ பிறகு அப்லோட் செய்கிறேன்.

ஸ்லோகம் இங்கே:



ஸ்ரீ ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்

த்யான ஸ்லோகம்

வந்தே ஸத்குரு வரலக்ஷ்மீம் – ஸம்பூர்ண ஸௌபாக்ய லக்ஷ்மீம்
க்ஷீர ஸாஹரோத்பவ லக்ஷ்மீம் – ஜய ஜய கோஷ லக்ஷ்மீம்
ஆனந்த அம்ருத லக்ஷ்மீம் – அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தார லக்ஷ்மீம் – சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம்

நமஸ்கார ஸ்லோகங்கள்:

ஓம் ஸ்ரீ ஆதி ஸந்தான கஜ தன தான்ய விஜய வீர மஹா லக்ஷ்மியை நமோ நம:

11)  ஸர்வாலங்கார லக்ஷ்மீம் – ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதா ரூப லக்ஷ்மீம் – ஸத்யலோக வாஸ லக்ஷ்மீம்
ஜிஹ்வா நிவாஸ லக்ஷ்மீம் – ஸார ஷேத்ர ப்ரஸாத லக்ஷ்மீம்
மந்த்ர ஸ்வரூப லக்ஷ்மீம் – மான ஸோல்லாஸ லக்ஷ்மீம்
ஸ்ரீமான ஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

22)  விநய விமல லக்ஷ்மீம் – வேதாந்த சார லக்ஷ்மீம்
கருணா கடாக்ஷ லக்ஷ்மீம் – காருண்ய பாக்ய லக்ஷ்மீம்
புத்ர சந்தான லக்ஷ்மீம் – புவன தன தான்ய லக்ஷ்மீம்
ஸர்வ ஸௌபாக்ய லக்ஷ்மீம் – சாந்தி சம்பன்ன லக்ஷ்மீம்
ஸ்ரீ சாந்தி சம்பன்ன லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

33)  வித்ய விசால லக்ஷ்மீம் – வேதாந்த மோக்ஷ லக்ஷ்மீம்
அக்ஷ்ர பாக்ய லக்ஷ்மீம் – ஆத்மாநூபூதி லக்ஷ்மீம்
தாபத்ரய நாச லக்ஷ்மீம் – தன்வந்த்ரி ரூப லக்ஷ்மீம்
லோஹஸ்வரூப லக்ஷ்மீம் – சுத்த சௌபாக்ய லக்ஷ்மீம்
ஸ்ரீ சுத்த ஸௌபாக்ய லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

44)  ஸ்தாவர ஜங்கம லக்ஷ்மீம் – கோ தான்யாதி விருத்தி லக்ஷ்மீம்
ஸோம ஸோதர பாக்ய லக்ஷ்மீம் – சிந்தாமணி ரத்ன லக்ஷ்மீம்
க்ஷீர ஸௌபாக்ய லக்ஷ்மீம் – ஸேவித மோஹ லக்ஷ்மீம்
ஜய ஜய வைராக்ய லக்ஷ்மீம் – சித்த ப்ரஹாச லக்ஷ்மீம்
ஸ்ரீ சித்த பிரஹாச லக்ஷ்மீம் – சரணம் ப்ரபத்யே

55)  கல்பக காமதேனு லக்ஷ்மீம் – கனக ஸௌபாக்ய லக்ஷ்மீம்
தேவேந்தரா ரோஹண லக்ஷ்மீம் – ஐராவத பூஜ்ய லக்ஷ்மீம்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி லக்ஷ்மீம் – ஸேவ்ய ஸம்பன்ன லக்ஷ்மீம்
வீர்ய விஜய லக்ஷ்மீம் – விஷ்ணு மாயேதி லக்ஷ்மீம்
ஸ்ரீ விஷ்ணு மாயேதி லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

66)  ஜ்வரபய ஸோஹ ஹந்த்ரீம் – ஸோஹ விநாஸ மந்த்ரீம்
துஷ்ட மிருக வைர்தந்த்ரீம் – துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூப லக்ஷ்மீம் – துரித ஹர மோக்ஷ லக்ஷ்மீம்
ஸாயுஜ்ய ஸாம்ராஜ்ய லக்ஷ்மீம் – ஸத்ய ஸ்வரூப லக்ஷ்மீம்
ஸ்ரீ ஸத்ய ஸ்வரூப லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

77)  ஜய ஜய கோஷ லக்ஷ்மீம் – சோம ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஸர்வ ஸக்தி ஸ்வரூப லக்ஷ்மீம் – ஸர்வ மூர்த்தி ப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்ய லக்ஷ்மீம் – பால குஹ யோஹ லக்ஷ்மீம்
ஸர்வ ஸமய லக்ஷ்மீம் – ஜய மங்கள ஸ்தோத்ர லக்ஷ்மீம்
ஸ்ரீ ஜய மங்கள ஸ்தோத்ர லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே

88)  ஞான ஸ்வரூப லக்ஷ்மீம் – நாதாந்த ஞான லக்ஷ்மீம்
ஸ்வரமய கீத லக்ஷ்மீம் – ஞானப்ரமோத லக்ஷ்மீம்
ஹ்ருத கமல வாஸ லக்ஷ்மீம் – சதுர்வேத ஸார லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்ய லக்ஷ்மீம் – ஸ்ரீ அஷ்ட ஸௌபாக்ய ஸ்லோக லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே