அஜித்குமாருடன்
என் கணவர் திரு சுப்ரமணியம் ஒரு படத்தில் நடித்த போது, அஜித்குமார் எடுத்த ஃபோட்டோவைப்
பற்றி, என் கணவர் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு இங்கே:
அஜித்குமாரின்
அன்பு மனம்
சென்ற வருடத்தில்
ஒரு நாள் – அஜித்குமாருடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஒரு காட்சியில் தோன்றும் வாய்ப்பு
கிடைத்தது.
படப்பிடிப்பு இடைவேளையின்
போது – சக நடிகர்கள் சிலர் ஒரு இடத்தில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தோம்.
லேசாக மழை ஆரம்பித்ததால்
– அஜித்குமார் உள்ளே வந்தார். நாங்கள் அமர்ந்திருந்த இடத்தை அவர் கடந்த போது, மரியாதை
நிமித்தம் நான் எழுந்து நின்றேன். அவர் உட்கார நினைத்தால் இடம் வேண்டுமே.
அஜித்குமார் என்ன
செய்தார் தெரியுமா – என் தோளைப் பிடித்து அழுத்தி என்னை உட்கார வைத்தார்.
அது மட்டுமல்ல
– “அங்கிள், நான் வர்றதுக்காக எல்லாம் நீங்க எழுந்திருக்ககூடாது, உட்காருங்க அங்கிள்`’
`என்று அன்புடன் கூறினார்.
அவர் அத்தனை அன்பாக
சில வார்த்தைகள் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஓரிரு நாட்களுக்குப்
பிறகு எனக்கு ஒரு ஃபோன் வந்தது.
அஜித்குமார் உங்களை
ஃபோட்டோ எடுத்திருக்கிறார். இந்த நம்பரை காண்டாக்ட் செய்து, உங்கள் ஃபோட்டோவை வாங்கிக்
கொள்ளுங்கள் என்று சொன்னார் ஒரு நண்பர்.
எனக்கு ஒன்றுமே
புரியவில்லை. அஜித் குமார் என்னை ஃபோட்டோ எடுத்தாரா, எப்பொழுது என்று திகைத்தேன்.
குறிப்பிட்ட நண்பரை
தொடர்பு கொண்டேன்.
படப்பிடிப்பு தளத்தில்
இருந்த என்னை, எங்கோ தொலைவில் இருந்து, மிக அருமையாக ஃபோகஸ் செய்து, புகைப்படம் எடுத்திருந்தார்
அஜித்குமார்.
அது மட்டுமா!
அந்தப் புகைப்படத்தை
பெரிய அளவில் ப்ரிண்ட் செய்து, அதில் அவரது ஆட்டோக்ராப் இட்டிருந்தார்.
அழகான முறையில்
அதை ஃப்ரேமும் செய்து, அனுப்பியிருந்தார்.
என்னுடைய மகிழ்ச்சியையும்
திகைப்பையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
புகைப்படைத்தை
என்னிடம் கொடுத்த நண்பர் என்ன சொன்னார் தெரியுமா?
“சார், இந்த ஃபோட்டோ
உங்ககிட்ட கொடுத்தாச்சுன்னு அஜித்குமாருக்கு தகவல் சொல்லணும். நீங்க இதை கையில் வைத்துக்
கொள்ளுங்க, ஒரு ஃபோட்டோ எடுக்கிறேன்.
அதோடு, நீங்க அஜித்குமாரிடம்
ஏதாவது சொல்லணும் என்றால் அதையும் ஒரு வீடியோவாக எடுத்துக்கறேன்” என்றார்.
மகிழ்ச்சியில்
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ரொம்ப நன்றி அஜித்
சார், சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களிடம் பேசி, என் நன்றியை சொல்ல ஆசைப்படறேன்” என்று ஆர்வத்துடன் சொன்னேன் அந்த வீடியோவில்.
அடுத்த வாரத்தில்
மற்றொரு படப்பிடிப்பில் நண்பர் என்னை சந்தித்தார்.
”அஜித்குமாரிடம்
பேசணும்னு சொன்னீங்களாமே, இப்பப் பேசறீங்களா?” என்று கேட்டு, அஜித்குமாரின் செயலாளரின்
ஃபோனில் தொடர்பு கொண்டு, என்னிடம் கொடுத்தார்.
“என்ன சுப்ரமணியம்
சார், ஃபோட்டோ கிடைச்சுதா” என்று அஜித்குமாரின் காந்தக் குரல் கேட்டது.
‘கிடைச்சுது சார்,
ரொம்ப ரொம்ப சந்தோஷம். எனக்கு ஒரு ஆசை, உங்களுடன் இன்னும் நிறைய படங்களில் சேர்ந்து
நடிக்கணும்” என்று கோரிக்கை வைத்தேன்.
“அதுக்கென்ன, கண்டிப்பா
நான் உங்க கூட நிறைய படங்களில் நடிக்கிறேன்” என்றார் அன்புடன்.
எத்தனை எளிமையும்
அடக்கமும் பாருங்கள்!!!
உங்க கூட நான்
நடிக்கணும் என்று நான் சொல்ல, அதுக்கென்ன நடிக்கலாம் என்று சொல்லாமல், ‘நான் உங்க கூட
நடிக்கிறேன்’ என்று வார்த்தைகளிலும் அவரது எளிமையான பண்பை வெளிப்படுத்திய பண்பாடு என்னை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மக்களின் மனம்
கவர்ந்த அஜித் குமாருக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.